சினிமா

“மூடநம்பிக்கைக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிராகப் பேசிய ஆன்மீகவாதி விவேக்” - ரசிகர்கள் உருக்கம்!

பல படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வந்தவர் விவேக்.

“மூடநம்பிக்கைக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிராகப் பேசிய ஆன்மீகவாதி விவேக்” - ரசிகர்கள் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நகைச்சுவை நடிகரும், சமூகப் பற்றாளருமான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு, திரைப்படங்களில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் என்பதாலேயே ‘சின்னக் கலைவாணர்’ என்றழைக்கப்பட்டார் நடிகர் விவேக்.

‘திருநெல்வேலி’ திரைப்படம் தொடங்கி பல படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வந்தவர் விவேக். பெரியாரின் கொள்கைகளை திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார்.

நடிகர் விவேக்கின் மறைவு ரசிகர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படங்களில் அவரது சிந்திக்கவைக்கும் கருத்துகளைக் குறிப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், விக்னேஷ் கிருஷ்ணன் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

“கருடன் பூ போடாதுடா புளுக்கதான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்..?

வண்டி ஓடனும்னா பூஜை போடக் கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்..

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத..

- என்ன பெரிய பவரு அதுல இருந்து கரெண்ட்டு எடுத்து கேரளாக்கு உன்னால அனுப்ப முடியுமா ?

இது மட்டும் இல்லடா Indian National highways-ல ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் உங்க குல தெய்வத்த தான்டா வச்சிருக்கு கவர்ன்மெண்ட்டு..

வர்ணம் கொடில தாண்டா இருக்கனும் மனுஷங்க கிட்ட இருக்கக்கூடாதுடா..

“மூடநம்பிக்கைக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிராகப் பேசிய ஆன்மீகவாதி விவேக்” - ரசிகர்கள் உருக்கம்!

சாப்பாட்டுல முடி இருந்தா உறவு நிலைக்கும்..

- அப்டீனா தமிழ்நாடு கர்நாடகா பார்டர்ல ஒரு லோடு முடிய கொண்டு போய் கொட்ட வேண்டியதானே..?

உங்கள எல்லாம் 200 பெரியார் இல்ல 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா...

இந்த வசனமெல்லாம் பேசிய விவேக் ஒரு ஆன்மீகவாதி. ஆன்மீகவாதியாக இருந்தாலும் மூடநம்பிக்கைக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிராக தன் படங்களில் மூலமாக பல கருத்துகளை மக்களிடையே விதைத்தவர். எல்லோருக்குமானவர் பெரியார் என்பதை உணர்த்திய பலரில் விவேக்கும் ஒருவர். ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories