சினிமா

தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு விருது : உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா மோடி அரசு? - கிளம்பும் புதிய சர்ச்சை!

நடிகர் ரஜினிகாந்த்துக்கு 'தாதா சாஹேப் பால்கே விருது' அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டாலும் தற்போது அந்த அறிவிப்பின் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு விருது : உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா மோடி அரசு? - கிளம்பும் புதிய சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். காலத்திற்கேற்ப பன்முக நடிகர்கள் திரையுலகிற்கு அறிமுகமானாலும் அவரை சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடக்கூடிய இடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கிறார்.

நூறு படங்களுக்கும் மேல் சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருப்பவர் தற்போது தனது 168வது படமான `அண்ணாத்த' படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இவரது பங்களிப்புக்காக, மத்திய அரசின் விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகியவை ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மீண்டும் இன்னொரு விருதின் மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

51வது தாதா சாஹேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. "நடிகராக, தயாரிப்பாளராக, திரை எழுத்தாளராக தனி முத்திரை பதித்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது" என ட்வீட் செய்திருக்கிறார் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இதற்கு முன்பு தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலசந்தர் என சில பிரபலங்கள் தாதா சாஹேப் விருதால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து இப்போது ரஜினிகாந்துக்கு இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது.

தேர்தல் சமயத்தில் இந்த விருதை ரஜினிக்கு கொடுத்திருப்பதில் உள்நோக்கம் உள்ளது என பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

banner

Related Stories

Related Stories