சினிமா

உச்ச நட்சத்திரங்கள் தயங்கியதை செய்த நிவின் பாலி - புதிய பாதைக்கு அடிகோடிட்ட ‘மூத்தோன்’ !

கண்ணாடி முன் நின்று தன்னை தானே பார்த்து வெட்கப்படும் பொழுதும் சரி, மும்பையில் போதைக்கு அடிமையான கதாபாத்திரத்திலும் சரி, நூறு சதவிகிதத்தை தந்திருக்கிறார்.

உச்ச நட்சத்திரங்கள் தயங்கியதை செய்த நிவின் பாலி - புதிய பாதைக்கு அடிகோடிட்ட ‘மூத்தோன்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

LGBT-ஐ ஆதரித்து சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் அதை விவாதத்திற்கு உட்படுத்தப்படாமல்தான் இன்று வரை அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். சினிமாவின் தாக்கமும் பிரதிபலிப்பும் மனிதர்களிடையே பெரும் மாற்றத்தை செய்வதுண்டு. அவ்வாறான சினிமா என்னும் ஆயுதத்தினால், வடஇந்திய சினிமாவில் கரண் ஜோஹர் போன்ற இயக்குனர்கள் ஓரினசேர்க்கையை முக்கிய பிரச்சனையாக கையாண்டிருந்தார்கள்.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் அவ்வாறு கையாள யாரும் முன்வரவில்லை. அதனை உடைத்தெறியும் வகையில் ஒரு தொடக்கப்புள்ளியாக, கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான படம் தான் "மூத்தோன்". 'கோவா' படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் சம்பத் ராஜ் ஆகிய மூன்று பேரின் காட்சிகளை, வெங்கட் பிரபு ஓரினசேர்க்கையாளர்கள் போன்று சர்க்காஸ்ட்டிக்காக கையாண்டிருந்தாலும், உண்மையில் அதை ஒரு முக்கிய பிரச்சனையாக யாரும் இது வரையில் இங்கு கையாளவில்லையே என்ற குறை இருந்துகொண்டேதான் இருந்தது.

உச்ச நட்சத்திரங்கள் தயங்கியதை செய்த நிவின் பாலி - புதிய பாதைக்கு அடிகோடிட்ட ‘மூத்தோன்’ !

அதனை தீர்த்து வைக்கும் வகையில் வெளியானது 'மூத்தோன்'. நிவின் பாலி நடிப்பில், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் செப் 11, 2019 திரையரங்கை வந்தடைந்தது. தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை மலையாளத்திலும், பிரேமம் படம் வாயிலாக தமிழிலும் உருவாக்கி வந்திருப்பவர் நிவின். அவ்வாறான ஒரு உச்ச நட்சத்திரம், அனைவரும் தொடவே பயப்படும் ஒரு விஷயத்தை, கட்டி அணைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கண்ணாடி முன் நின்று தன்னை தானே பார்த்து வெட்கப்படும் பொழுதும் சரி, மும்பையில் போதைக்கு அடிமையான கதாபாத்திரத்திலும் சரி, நூறு சதவிகிதத்தை தந்திருக்கிறார்.

அவருடன் இணைந்து நடித்த ரோஷன் மாத்தீவின் நடிப்பு, சற்றும் குறைவில்லை. வாய் பேச முடியாத கதாபாத்திரதிற்காக சைகை மொழியை மெனக்கெட்டு கற்றிருப்பார் போலும். எங்கும் பிசிறு தட்டவேயில்லை. நிவினிற்கும், ரொஷானிற்கும் இடையிலான காதல் காட்சிகளை, வசனங்களால் வடிவமைத்திருந்தால், அது முகசுழிப்பை ஏற்படுத்தி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அதனை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி, சைகை மொழியில் அவர்கள் செய்யும் உரையாடல்கள் கவித்தன்மையாய் அமைந்தது.

உச்ச நட்சத்திரங்கள் தயங்கியதை செய்த நிவின் பாலி - புதிய பாதைக்கு அடிகோடிட்ட ‘மூத்தோன்’ !

இச்சமூகத்தால் அவர்கள் ஒன்று சேராமல் போனது ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இல்லை, இன்னும் பிற மதத்தினரையோ, சாதியினரையோ மணப்பது தவறு என்ற மனநிலையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமூகம், ஓரின சேர்க்கை என்பது இயற்கையாய் மனிதர்களுக்குள்ளேயே நடக்கும் ஒரு ஹார்மோன் பிரச்சனைதான் என்பதை ஏற்றுக்கொள்ளாது என்பது நாம் அறிந்த கூற்றே!.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியின் பங்களிப்பு படத்தின் சாராம்சத்தை நம் கண்வழியாக கடத்துகிறது. சாகர் தேசாயின் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பலமாக அமைந்தது. இனி தென்னிந்தியாவில் உருவாகப்போகும் அனைத்து LGBT சார்ந்த படங்களுக்கு வித்திட்டவர்கள் கீத்து மோகன்தாஸும், நிவின் பாலியும் என்பதில் ஐயம் இல்லை.

எழுத்து : சுபாஷ்

banner

Related Stories

Related Stories