சினிமா

“கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த வில்லன் நடிகர்” - நிஜ ஹீரோ என சோனு சூட்க்கு பாராட்டு!

மும்பையில் சிக்கித் தவித்த கர்நாடக மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் நடிகர் சோனு சூட்.

“கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த வில்லன் நடிகர்” - நிஜ ஹீரோ என சோனு சூட்க்கு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக வெளிமாநிலங்களுக்கு பணி நிமித்தமாக சென்றிருந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வருகின்றனர்.

இதனிடையே, வேலையும் இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவும் கிடைக்காமல் அவதிப்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேறு வழியின்றி பல நூறு கிலோ மீட்டருக்கு கால்நடையாகவே நடந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

“கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த வில்லன் நடிகர்” - நிஜ ஹீரோ என சோனு சூட்க்கு பாராட்டு!

ஆகையால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக சுமார் 40 நாட்களுக்கு பிறகு கண்விழித்த மோடி அரசு ரயில் போக்குவரத்தை அறிவித்தது. அதிலும் பல்வேறு குளறுபடிகள், லஞ்ச லாவண்யங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வேலையே இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்களிடமே பயணச் செலவுக்கு கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது என பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் சோனு சூட், மகாராஷ்டிராவின் மும்பையில் சிக்கித்தவித்த கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, தனது சொந்த செலவின் மூலம் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

“கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த வில்லன் நடிகர்” - நிஜ ஹீரோ என சோனு சூட்க்கு பாராட்டு!

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில அரசுகளிடம் உரிய அனுமதி பெற்று இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார் சோனு சூட். சினிமாவில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வருகிறார் என ரசிகர்களும், நெட்டிசன்களும் பாராட்டி வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு ஆயிரத்து ஐந்நூறு பாதுகாப்பு உபகரணங்களை சோனு சூட் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories