சினிமா

1.25 லட்சம் ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சல்மான்... ‘Anna Daan’ சேலஞ்சுக்கு அழைப்பு! #CoronaLockdown

ஊரடங்கால் பரிதவிக்கும் மக்களுக்காக உதவி செய்ய புதிய சேலஞ்சை தொடங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

1.25 லட்சம் ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சல்மான்... ‘Anna Daan’ சேலஞ்சுக்கு அழைப்பு! #CoronaLockdown
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வேலையில்லாமல் தவித்து வரும் ஏழை எளிய மக்கள் அடுத்த வேளை உணவு கிடைக்காமல் மிகவும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு தரப்போ, ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல், வேலையில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள், சாலையோரவாசிகள் என அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்புகளும் எடுக்காமலேயே உள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

1.25 லட்சம் ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சல்மான்... ‘Anna Daan’ சேலஞ்சுக்கு அழைப்பு! #CoronaLockdown

ஆகையால், அரசை நம்பி பயனில்லை என முடிவெடுத்து பல தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து, உணவில்லாமல் அவதியுறும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். சினிமா துறையினரும் இதுபோன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.

அவ்வகையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1.25 லட்சம் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தனது நண்பர்களுடன் இணைந்து வழங்கியுள்ளார்.

மேலும், ‘அன்னதானம் (Anna Daan)’ என்ற சேலஞ்ச் ஒன்றை ட்விட்டரில் ஏற்படுத்தி, இதேபோன்று மற்ற பிரபலங்களும் மக்களுக்கு உதவிப்புரிய முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories