சினிமா

“நான் பட்ட கஷ்டங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது”: துப்பறிவாளன் 2 குறித்து விஷால் உருக்கம்- முற்றும் மோதல்!

'துப்பறிவாளன் 2' படத்தின் போது மிஷ்கினுடனான பிரச்னை குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நான் பட்ட கஷ்டங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது”: துப்பறிவாளன் 2 குறித்து விஷால் உருக்கம்- முற்றும் மோதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2017ம் ஆண்டு விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவான துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனையடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 உருவாகி வந்தது. அதில், பிரசன்னா, கவுதமி, ரகுமான் உள்ளிட்டோர் நடிக்கவும், இசைஞானி இளையராஜா இசையமைக்கவும் ஒப்பந்தமானார்கள்.

“நான் பட்ட கஷ்டங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது”: துப்பறிவாளன் 2 குறித்து விஷால் உருக்கம்- முற்றும் மோதல்!

லண்டனில் நடைபெற்றுவந்த ‘துப்பறிவாளன் 2’ படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தது. அந்த சமயத்தில் படத்தின் பட்ஜெட்டை மீறி இயக்குநர் மிஷ்கின் செலவை இழுத்துவிட்டதாக, படத்திலிருந்து தயாரிப்பாளரான விஷால் மிஷ்கினை நீக்கினார்.

அதன் பிறகு, எஞ்சிய படத்தின் பணிகளை தானே இயக்குவதாகவும் விஷால் தெரிவித்தார். விஷால்-மிஷ்கின் விவகாரம் கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஷால் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், மிஷ்கின் பெயரில்லாமல் விஷால், இளையராஜா பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, நடிகர் விஷால் ‘துப்பறிவாளன் 2’ மூலம் இயக்குநராகியுள்ளது அதிகாரப்பூர்வமாகியுள்ளது.

“நான் பட்ட கஷ்டங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது”: துப்பறிவாளன் 2 குறித்து விஷால் உருக்கம்- முற்றும் மோதல்!
“நான் பட்ட கஷ்டங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது”: துப்பறிவாளன் 2 குறித்து விஷால் உருக்கம்- முற்றும் மோதல்!

இதனிடையே, ‘துப்பறிவாளன் 2’ படத்தில் பணியாற்றுவதற்காக மிஷ்கின் விஷாலுக்கு 15 நிபந்தனைகள் கொண்ட கடிதத்தில் நகல் வெளியானதைத் தொடர்ந்து விஷாலும் அது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையிலும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ஒரு இயக்குநர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்?. ஒரு தயாரிப்பாளராக, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை. படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா?

சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என அந்த அறிக்கை நீள்கிறது.

banner

Related Stories

Related Stories