சினிமா

‘மாஸ்டர்’ படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்: குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!

விஜய்யின் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானதால் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

‘மாஸ்டர்’ படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்: குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யை வைத்து முதல் முறையாக கைதி, மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் 64வது படமாக உருவாகி வரும் இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்யப்படவுள்ளது. எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதுவரை படம் தொடர்பாக இரண்டு போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது. முன்னதாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டி.வி வாங்கியிருந்தது.

‘மாஸ்டர்’ படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்: குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!

ஏற்கெனவே படத்தின் மீதான ஆவல் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. தற்போது படத்தின் பெரும்பான்மையான விற்பனையும் முடிந்துள்ளதுள்ளது கோலிவுட்டிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு விஜய் - விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டரை வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, #MasterThirdLook என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories