சினிமா

கேரளாவில் இருந்து சீனா வரை சென்ற ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் ரீமேக் ஆன மலையாள படம் த்ரிஷ்யம் தற்போது சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து சீனா வரை சென்ற ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரில்லர் நிறைந்த படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா, சித்திக், எஸ்தர் அனில், ஆஷா சரத் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது

மலையாளத்தை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தியிலும் த்ரிஷ்யம் படம் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது

கேரளாவில் இருந்து சீனா வரை சென்ற ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2015ம் ஆண்டு பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். இதில், கமல் ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் என பலர் நடித்திருந்தனர். ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் த்ரிஷ்யம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது.

இந்நிலையில், இந்தியாவை கடந்து தற்போது சீன மொழியிலும் ரீமேக் ஆகி வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது த்ரிஷ்யம். Sheep without a shepherd என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது

தற்போது டிசம்பர் 20ம் தேதி இந்த படம் சீனாவில் வெளியாகவுள்ளது. அதே நாளில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் தம்பி படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories