சினிமா

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடப் பிரச்னை : சமரச தீர்வு மையத்தை அணுக நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடப் பிரச்னை : சமரச தீர்வு மையத்தை அணுக நீதிமன்றம் உத்தரவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்.வி பிரசாத் ஸ்டுடியோவில் சுமார் 42 ஆண்டுகளாக மியூசிக் ஸ்டுடியோ அமைத்து 6000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து வந்துள்ளார் இளையராஜா.

இவ்வாறு இருக்கையில், பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய இயக்குநராக இருக்கும் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அதனால், இளையராஜ இசையமைத்து வந்த ஒலிப்பதிவு கூடம் உள்ள இடத்தை மற்றொரு நபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது தற்போதைய ஸ்டுடியோ நிர்வாகம்.

அதனால், இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியேற அந்நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. எவ்வுளவு வாடகை வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொல்லியும் சாய் பிரசாத் அதற்கு ஒத்துக்கொள்ளாததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இளையராஜாவின் இசை பணிகளும் சமீப காலங்களாக முடங்கியுள்ளது.

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடப் பிரச்னை : சமரச தீர்வு மையத்தை அணுக நீதிமன்றம் உத்தரவு

இதனையடுத்து, கடந்த 28ம் தேதி இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பிரசாத் ஸ்டுடியோவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இளையராஜா சார்பில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இளையராஜா தரப்பு குற்றஞ்சாட்டியது.

நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, இளையராஜா தொடர்ந்த வழ்க்கை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பாரதிதாசன்.

தமிழ்த் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தகுந்த மரியாதை தர வேண்டும் என்று ஒரு தரப்பும், இடத்தின் உரிமையாளருக்கு இதில் அனைத்து உரிமையும் உண்டு என்று மற்றொரு தரப்பும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories