சினிமா

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹீரோக்களின் சினிமா பயணம் எப்போதும் ஏறுமுகமாகவே இருந்து விடுவதில்லை பல இடங்களின் ஏற்றமும் சில இடங்களில் இரக்கங்களும் நிறைந்ததாகவேதான் அவர்களின் சினிமா க்ராஃப் இருக்கும். ஆனால் ஹீரோயினை பொருத்தமட்டில் அது போன்றதொரு க்ராஃப்களுக்கு வாய்ப்பே இல்லை. அதிலும் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஹீரோயினுக்கு செகண்ட் இன்னிங்ஸ், நீண்ட நாட்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி போன்றவைகள் மிகவும் அறிதானவைதான்.

அப்படியே வந்தாலும் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பது என்பது நிகழாத காரியம். ஒரு நாயகி, ஒன்று உச்சத்தில் இருக்க வேண்டும் இல்லை என்றால் சினிமாவில் இருந்து காணாமல் போகவேண்டும். இது தான் தமிழ் சினிமா. இப்படியான தமிழ் சினிமா துறையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளும் ஒவ்வொரு நடிகைக்கான காலமாகவே இருந்து வருகிறது. “நடிகையாக இருக்கும்போதுதான் தெரிகிறது, நடிகையாக இருப்பதன் புகழும் நடிகையாக இருப்பதன் வலியும்” ஒரு பிரபல நடிகை ஒருவரின் வார்த்தைகள் இவை. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தற்போதைய தென்னிந்திய சினிமாவின் லீடிங் ஸ்டார் நயன்தாராவுக்கு பொருந்தும். இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் இவருக்கான ஒரு சிறப்பு தொகுப்பு இது.

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

ஒரு நடிகர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது மிகவும் சாதாரணம். ஆனால் ஒரு நாயகி ஹீரோக்களை தாண்டி சம்பளம் வாங்குவது என்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. இதற்காக அவர் தன் உழைப்பை ஹீரோக்களைவிட அதிகமாக கொடுக்க வேண்டும். இப்படி ஒரு டாப் பொசிஷனுக்கு வர நயன்தாராவுக்கு நிறைய காலங்கள் தேவைப்படவில்லை. சினிமாவுக்கு எண்ட்ரியானது முதலே உச்ச நடிகர்களுடனேதான் இவரின் பயணம் இருந்தது. அதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம் என சொல்வார்கள் சிலர். ஆனால் அதிர்ஷ்டம் மட்டும் எத்தனை நாட்களுக்கு நிலைக்க செய்யும்? அதையும் தாண்டி உழைப்பு இருந்ததால்தான் இன்று இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரு காலத்தில் “இந்த பொண்ணுக்கு மாறு கண்ணா” இருக்கு என்று சொல்லி நிராகரிக்கப்பட்டவர் இன்று தென்னிந்திய சினிமாவின் நேர் கண்ணாகியிருக்கிறார்.

தன்னுடைய காலேஜ் நாட்களை படிப்போட சேர்ந்து மாடலிங் வேலைகளையும் பார்த்துவந்த நயன்தாராவை மலையாள இயக்குநர் சத்யன் அந்திகட் ‘Manassinakkare’ படம் மூலமாக 2003ல் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு ‘Vismayathumbathu’, ‘Natturajavu’ ஆகிய மலையாள படங்களில் நடித்த இவரை டைரக்டர் ஹரி ‘ஐயா’ படம் மூலம் 2005ல் கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தினார். சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அறிமுக நாயகியான நயன்தாரா கோலிவுட் ரசிகர்கள் மனதில் முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். அதன் விளைவு இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினியோடு.

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

இப்படியான ஒரு வாய்ப்பு எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இதை வேண்டுமானால் நாம் அதிர்ஷ்டம் என எடுத்துக்கொள்ளலாம். 2005ல் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சந்திரமுகி வரலாற்று சாதனைப் படைத்த வெற்றிப்படம் ஒரு வருடம் தாண்டி திரையரங்கில் ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. அடுத்து இரண்டு மலையாள படங்கள் இவருக்கு ரிலீஸாக அதே ஆண்டு சூர்யாவோடு இணைந்து மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’ இவருக்கு வேறொரு அடையாளத்தை தேடிக்கொடுத்தது. ஒரே ஆண்டில் தமிழ் மலையாளம் என சேர்த்து 5 படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஐந்தும் ஹிட் லிஸ்டில் சேர்ந்ததும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள நடிப்போடு சேர்த்து தன் படங்களில் கொஞ்சம் கவர்ச்சியும் கூட்டிருந்தார் நயன்தாரா.

‘கள்வனின் காதலி’, ‘வல்லவன்’, ‘தலைமகன்’, ‘ஈ’, ‘பில்லா’, ‘சத்யம்’, ‘ஏகன்’, ‘வில்லு’ என வரிசையாக தான் நடித்த எல்லா படங்களிலும் கவர்ச்சிக்காட்டியிருந்தார். ஆனால் இது அவருக்கு எதிர்மறையாகவே அமைந்திருந்தது. கவர்ச்சி காட்டினால் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்தவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இந்த லிஸ்ட்டில் தப்பியது அஜித்துடன் நடித்த பில்லா மட்டும் தான். மற்ற படங்கள் அனைத்தும் ஏகபோக விமர்சனங்களுக்கு மட்டுமே ஆளானது.

இதனிடையே இவரின் காதல் குறித்த தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் சொந்த வாழ்வில் நிறைய அவமானங்களையும் ஏமாற்றங்களையும் இவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால் தன் சொந்த பிரச்சனைகளை சினிமாவிற்குள் கொண்டுவராமல் ஒரு பக்கம் பிரச்சனைகளையும் மறுபக்கம் தன் நடிப்பு பணியையும் தொடர்ந்து சமாளித்து வந்தார்.

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

என்னதான் வலியை மறைத்தாலும் இவரால் முழுமையான நடிப்பை வெளிப்படுத்த முடியவில்லை. இவர் வாழ்வின் சோகம் இவர் நடிக்கும் படங்களுக்கும் தொற்றிக்கொண்டது போல இருந்தது 2006ல் இருந்து 2013 வரையிலான இவரின் திரைப்பயணம். சொல்லிக் கொள்ளும் படியான பெரிய ஹிட் எதுவும் அப்போது இவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் இவரின் வாய்ப்புகளை அந்த தோல்விக் குறைக்கவில்லை என்பது தான் ஒரே ஆறுதல். இந்த பிரச்சனைகளுடனே தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தவந்த இவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்பிவிட்டது சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’. இந்த படத்தில் தனுஷோடு சேர்ந்து ஒரு குத்துப்பாட்டுக்கு வந்த இவர், தன்னை மீண்டும் கோலிவுட் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நினைவுப்படுத்தினார்.

இதை இயக்குநர் அட்லி ‘ராஜா ராணி’யில் பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மட்டம் தட்டப்பட்ட நயன்தாராவின் சினிமா க்ராஃப் எழுச்சியை நோக்கி பயணிக்க தொடங்கிய படம் இது. இது நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் எல்லாம் கிடையாது. ஏற்கனவே இடையில் இவர் இரண்டு மூன்று இன்னிங்ஸ்கள் கடந்துவிட்டார். எப்போதும் போல மீண்டும் ஒன்று இரண்டு படங்களில் காணாமல் போய்விடுவார் என சிலர் அலட்சியம் காட்டிய நேரத்தில் ஏற்ற இறக்கங்கள் புதிதல்ல ஆனால் அதை மற்றவர்களுக்கு பழக்கிவிடக் கூடாது என சுதாரித்துக் கொண்டார் நயன்தாரா. ஃப்ளாப் ஹிட் என மாறி மாறி இவரின் க்ராஃப் செல்ல 2015ல் அதை ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் சரி செய்து கொண்டார்.

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

இந்த முறை ஹீரோக்களை நம்பி படத்தில் நடிக்கவில்லை தானே சோலோ ஹீரோயினாகவும் தன்னை சுற்றியிருக்கும் கதைக்களம் கொண்ட படங்களாகவும் தேர்வு செய்ய தொடங்கினார். ‘மாயா’ நயன்தாரா சோலோ நாயகியாக நடித்த முதல் படம். ஹாரர் படமான இது ஹிட்டடிக்க அதன் பின் வரிசையாக ‘நானும் ரௌடிதான்’, ‘இரு முகன்’, ‘காஷ்மோரா’ என தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார். 2017ல் ‘டோரா’, ‘அறம்’ என இரண்டு படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்தார். இரண்டும் ஹிட்டானது. குறிப்பாக அறம் படத்தில் நயன்தாரா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளில் இவருக்கு கிடைக்காத ஒரு வரவேற்பும் புகழும் இந்த படத்தில் கிடைத்து. இதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து இதே ஃபார்முலாவை பயன்படுத்தி வெற்றிப்படங்களாகவே நடிக்க தொடங்கினார்.

முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஸ்பெஷல் ஷோ காட்சி, நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கும் வழங்கப்பட்டது. 2018ல் வெளியான ‘கோலமாவு கோகிலா’ ஒரு ஹீரோயின் நடித்து அதிகாலைக் காட்சி திரையிடப்பட்ட முதல் படம். இந்த முத்திரை இதுவரையில் வேறு எந்த ஹீரோயினும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘இமைக்கா நொடிகள்’, ‘விஸ்வாசம்’, மிஸ்டர்.லோக்கல்’, ‘ சைரா நரசிம்ம ரெட்டி’ என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் இடையில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ என சோலோ ஹீரோயினாகவும் தன் திரைப்பயணத்தை கவனித்துக் கொண்டார். 2013க்கு பிறகு இவரின் சினிமா க்ராஃப் பெரியளவில் சரிவை தந்திக்கவில்லை, ஜான் ஏறினால் முழும் சறுக்கல் என்று இருந்த தன் க்ராஃபை முழம் ஏறி ஜான் சறுக்கல் என தலைக்கீழாக புறட்டிப்போட்டார். கடைசியாக இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிகில் படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்க தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர ‘நெற்றிக்கண்’, ‘மூக்குத்தி அம்மன்’ என சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

தன்னை வருத்தி சிகரம் தொட்ட லேடி சூப்பர் ஸ்டார் - நயன்தாரா பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே. நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது. நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக நயன்தாரா தன் ஆளுமையை ஆழமாக நிரூபித்துள்ளார்.

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும் ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும்போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வதுதான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை. அதுதான் இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் நயன்தாராவை ஒரு தனித்துவமான நாயகியாகவும் கொண்டாட வைக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தை விஸ்வாசத்தின் வெற்றியோடு தொடங்கிய இவருக்கு அடுத்த ஆண்டின் தொடக்கம் தர்பாரின் வெற்றியாக அமைய இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.

banner

Related Stories

Related Stories