சினிமா

வருவான வரி ஏய்ப்பு : வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் - விரைவில் கைதாகிறாரா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ?

வருமான வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருவான வரி ஏய்ப்பு : வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் - விரைவில் கைதாகிறாரா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இவர் சிங்கம், மெட்ராஸ், பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் மீது கடந்த 2007-08, 2008-09ம் ஆண்டுக்கான தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்புச் செய்ததாக கூறி வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, எதிர்மனுதாரரின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக ஞானவேல் ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை.

பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories