மாநகரம், கைதி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து அவரது 64வது படத்தை இயக்கி வருகிறார்.
படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிப்பதை தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் அறிவித்திருந்தது. மேலும் ஆண்ட்ரியா, யுடியூப் சேனலில் நடிக்கும் ப்ரிகிதா என்பவரும் விஜய் 64ல் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு சம்மருக்கு வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பாதி படபிடிப்பு வேலைகள் சென்னையில் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் நடக்க இருக்கிறது.
விஜய் 64க்கான இரண்டு பாடல்களை அனிருத் கம்போஸ் செய்து முடித்திருப்பதால் அதன் படப்பிடிப்பை டெல்லியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கேங்ஸ்டர் படமாக உருவாகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை ஒட்டி வெளியாக இருப்பதாகவும், இதுவரை வந்த படங்களை விட இந்த படத்தில் விஜய் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளி வந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் விஜய் 64ல் 96 படத்தில் த்ரிஷாவின் பள்ளிகால ஜானு கதாபாத்திரத்தில் நடித்த கவுரி கிருஷ்ணனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் விஜய் 64 குறித்த ஒவ்வொரு அப்டேட்களும் வெளிவந்துக் கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது.