ஒரு நடுநிசியின் 4 மணிநேரத்திற்குள் நடக்கும் கதையே லோகேஷ் கனகராஜின் கைதி படத்தின் கரு. மாநகரம் படத்துக்கு பிறகு கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ரிலீசாகியுள்ளது இந்த படம்.
பாடல்கள், ஹீரோயின்கள் என எந்த ஒரு கமர்சியல் கோட்பாடுகளும் இல்லாத மாறுபட்ட சினிமாவாக ‘கைதி’யை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் வெறித்தனமாக தெறிக்கவிடப்பட்டு வருகிறது.
ட்ரீம் வாரியஸ்ரின் எஸ்.ஆர். பிரபு தயாரித்திருக்க, சாம் சி.எஸ். கைதிக்கு இசையமைத்திருக்கிறார். கார்த்தியின் தில்லி கதாப்பாத்திரத்துக்கும், சாம்.சி.எஸ்ஸின் பி.ஜி.எம்க்கும் ரசிகர்களிடயே அசைக்க முடியாத வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கைதி படத்தின் 2ம் பாகம் வர வாய்ப்பிருப்பதாக படத்தின் ப்ரஸ் மீட்டின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூசகமாக கூறியிருந்தார். தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், “படத்தை பாராட்டிய ரசிகர்களுக்கும், கதையை ஏற்று தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும், கார்த்திக்கும் என பலருக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ், தில்லி மீண்டும் வருவார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விஜயின் 64வது படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அநேகமாக கைதியின் 2ம் பாகத்தை விஜய் 64க்கு பிறகு எடுக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.