சினிமா

இந்தியாவில் புறந்தள்ளப்பட்ட தமிழ் படத்துக்கு அமெரிக்காவில் 4 விருதுகள் : தயாரிப்பாளர் பெருமிதம்!

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்துக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்.

இந்தியாவில் புறந்தள்ளப்பட்ட தமிழ் படத்துக்கு அமெரிக்காவில் 4 விருதுகள் : தயாரிப்பாளர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைவரது பாராட்டையும் பெற்று, கோலிவுட் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது உலகளவிலான கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்படப் போட்டி விருது விழாவில் (LAFA) சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைக்கான விருது என மொத்தம் நான்கு விருதுகளை அள்ளியுள்ளது ராட்சசன்.

இவ்விருது குறித்துப் பேசியுள்ள தயாரிப்பாளர் G. டில்லி பாபு, “ராட்சசன் படம் படைத்திருக்கும் இந்த சாதனை மொத்தப் படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தனை நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே சாரும். ஒரு தமிழ்ப்படம் உலகின் மதிப்புமிக்க லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது மிகவும் பெருமைமிக்கது. இன்னும் இதுபோன்ற சிறந்த படைப்புகளை வழங்க இவ்விருது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories