சினிமா

சினிமாவுக்கு இடைவெளி விட்ட பிரபல ‘தேசிய விருது’ நடிகர் : பரபரப்பு தகவல்!

அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஆயுஷ்மான் குரானா திடீரென சினிமாவுக்கு நீண்ட இடைவெளி விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவுக்கு இடைவெளி விட்ட பிரபல ‘தேசிய விருது’ நடிகர் : பரபரப்பு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் திரையுலகின் மோஸ்ட் வான்டட் கதாநாயகனாக வலம் வருபவர் ஆயுஷ்மான் குரானா. இவர் நடிப்பில் வெளிவந்த அந்தாதுன், ஆர்ட்டிகள் 15, பதாய் ஹோ போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

பெண்கள், ஆண்கள் என பலதரப்பட்ட மக்களால் கொண்டாடக் கூடிய நடிகராக உள்ளார் ஆயுஷ்மான். அந்தாதுன் படத்தில் தன்னுடைய நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் ஆயுஷ்மான் குரானா தனதாக்கியுள்ளார்.

சினிமாவுக்கு இடைவெளி விட்ட பிரபல ‘தேசிய விருது’ நடிகர் : பரபரப்பு தகவல்!

இந்த வகையில், சமீபத்தில் வெளியான ட்ரீம் கேர்ள் படமும் குழந்தைகள் உட்பட பலரால் ரசிக்கப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், பாலா படத்திற்கான வேலையை முடித்துவிட்ட நிலையில் படம் வருகிற நவம்பர் 22ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து ஆயுஷ்மான் நடிப்பில் ‘ஷுப் மங்கல் ஸ்யாதா ஸாவ்தன்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பாலா படத்துக்குப் பிறகு ஆயுஷ்மான் எந்தப் படத்திலும் கமிட் ஆகாததால் அடுத்து வரும் சில மாதங்களுக்கு தன்னுடைய மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவுள்ளதாக ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு இடைவெளி விட்ட பிரபல ‘தேசிய விருது’ நடிகர் : பரபரப்பு தகவல்!

இதற்கிடையே, பாலா படத்துக்கான புரோமோஷன் வேலைகளில் மட்டும் பங்காற்றிவிட்டு பின்னர் இடைவெளி எடுத்துக்கொள்ளப் போவதாக ஆயுஷ்மான் கூறியுள்ளார்.

பேக்-டு-பேக் திரைப்படங்களில் நடித்து வருவதால் குடும்பத்தினருடன் இருப்பதில்லை என மனைவியும் பிரபல நடிகையுமான தஹிரா காஷ்யப் வருத்தம் தெரிவித்ததாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார்.

மேலும், இந்த ப்ரேக் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை, ஒருவேளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories