சினிமா

ஜெயம் ரவியின் உதவியாளர் மீது போலிஸில் புகார் : என்ன காரணம்?

நடிகர் ஜெயம் ரவியின் நேர்முக உதவியாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவியின் உதவியாளர் மீது போலிஸில் புகார் : என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் ஜெயம் ரவிக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஜெயம் ரவியின் உதவியாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற முன்னாள் உதவி ஆணையர் ரகுராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் டாப் கார்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், நடிகர் ஜெயம் ரவிக்கு தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு தனியார் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு அளித்து வந்தனர். இரண்டு நபர்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் பாக்கி வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இரண்டு பாதுகாவலர்களில் ஒருவரை தன்னிச்சையாக அவர்களே தங்களது சொந்த பாதுகாவலராக தங்களது நிறுவனத்திற்கு தெரியாமல் டுத்துக் கொண்டதாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் ஜெயம் ரவியின் நேர்முக உதவியாளர் சேஷாகிரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகராக, ஹிட் படங்களை கொடுத்து வரும் ஜெயம் ரவியின் நேர்முக உதவியாளர் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories