சினிமா

பிரெஞ்ச் பட காப்பி, செட் திருட்டு , போஸ்டர் திருட்டு : 350 கோடியில் உருவான ‘சாஹோ’ படத்தை சுற்றும் சர்ச்சை

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ’சாஹோ’ படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பிரெஞ்ச் பட காப்பி, செட் திருட்டு , போஸ்டர் திருட்டு : 350 கோடியில் உருவான ‘சாஹோ’ படத்தை சுற்றும் சர்ச்சை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகுபலி படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் பிரபாஸ் உலக அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக அறியப்பட்டார். அந்த படத்தின் தாக்கத்தை அடுத்து, இயக்குநர் சுஜீத் இயக்கத்தில், ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்து பிரபாஸ் நடித்துள்ள படம் ’சாஹோ’.

350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் கடந்த 30ம் தேதி உலகெங்கும் ரிலீசானது. இந்த படத்தை எதிர்ப்பார்த்து உலக அளவில் ரசிகர்கள் காத்து இருந்தனர்.

பிரெஞ்ச் பட காப்பி, செட் திருட்டு , போஸ்டர் திருட்டு : 350 கோடியில் உருவான ‘சாஹோ’ படத்தை சுற்றும் சர்ச்சை

பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் ’சாஹோ’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருப்பதால் படம் குறித்த ஆவல் மேலும் பெரிதாக்கியது.

இந்தப்படம் தற்போது ரிலீசாகியுள்ள நிலையில், சாஹோ படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருப்பினும், வெளியான 3 நாட்களில் 294 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் பட காப்பி, செட் திருட்டு , போஸ்டர் திருட்டு : 350 கோடியில் உருவான ‘சாஹோ’ படத்தை சுற்றும் சர்ச்சை

பிரெஞ்ச் நாவலை தழுவி ஏற்கெனவே எடுக்கப்பட்ட ’லார்கோ வின்ச்’ என்கிற படத்தை காப்பியடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் இயக்குநர் ஜெரோம் செல்லி என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, தெலுங்கில் பவன் கல்யான் நடிப்பில் வெளியான ’அஞ்ஞானவாசி’ என்கிற படமும், லார்கோ வின்ச் படத்தின் முதல் பாகத்தின் காப்பி என்றும் ஜெரோம் செல்லியே குறிப்பிட்டிருந்தார்.

அவரது ட்விட்டில், காப்பியடித்து படத்தை எடுத்திருந்தாலும் அதனைத் திறம்பட எடுங்கள் எனவும் காட்டமாக அறிவுறுத்தியுள்ளார் ஜெரோம்.

இதுமட்டுமல்லாமல், சஹோவில் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் இடம்பெற்ற Baby Want You Tell Me என்ற பாடலில் வரும் செட் வடிவமைப்பு பெங்களூருவைச் சேர்ந்த பிரபல லீசா ரே என்பவருக்குச் சொந்தமான ஓவியத்தை திருடி எவ்வித உரிமமும் அளிக்காமல் பயன்படுத்தியதாக அவர் தனது சமூக வலைதளத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் அடுத்தவர்களின் படைப்பை அப்பட்டமாக காப்பி அடித்து அதனை தனக்கு சொந்தமானதாக காண்பித்துக் கொள்வது எவ்விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு, பிரபாஸும், ஷ்ரத்தா கபூர் இருப்பது போன்ற சாஹோ படத்தின் போஸ்டர், ஏ தில் ஐ முஷ்கில் படத்தில் ரன்பீர் கபூரும், ஐஸ்வர்யா ராயும் கொடுத்த போஸ் போன்று இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

பிரெஞ்ச் பட காப்பி, செட் திருட்டு , போஸ்டர் திருட்டு : 350 கோடியில் உருவான ‘சாஹோ’ படத்தை சுற்றும் சர்ச்சை

தற்போது, பிரெஞ்ச் பட காப்பி, செட் வடிவமைப்பு காப்பி போன்றவற்றில் சர்ச்சை எழுந்துள்ளதால், 350 கோடி செலவில் படம் எடுத்தவர்களால் சொந்தமாக இதனைக் கூட யோசிக்க முடியாதா என சினிமா தரப்பினர் உட்பட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories