சினிமா

ரசிகர்கள் கொண்டாடும் ரோல்மாடல் - தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றார் அஜித்!

கோவையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றதால் மத்திய பிரதேசத்துக்கு செல்கிறார்.

ரசிகர்கள் கொண்டாடும் ரோல்மாடல் - தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றார் அஜித்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் அஜித், திரைத்துறை மட்டுமல்லாமல் ட்ரோன் தொழில்நுட்பம், கார் ரேஸ், புகைப்படக் கலை என பல துறைகளில் ஆர்வம் காண்பித்து வருகிறார். இவரது வழிகாட்டுதலின் படி செயல்பட்ட, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் ’தக்‌ஷா’ குழு, ஆளில்லா ட்ரோன் விமான தொழில்நுட்பத்தில், உலக அளவில் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாடும் ரோல்மாடல் - தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றார் அஜித்!

கூல் டெக்கி பிம்பத்துடன் வளம் வரும் அஜித், இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கோயமுத்தூரில் கடந்த வாரம் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார்.

இதில், சென்னை ரைஃபிள் க்ளப் சார்பாக பங்கேற்ற அஜித், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 5 சுற்றுகளில் 400க்கு 314 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதனையடுத்து, வருகிற டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்க உள்ளார். தனது படங்களில் கேங்ஸ்டராகவும், டானாகவும் துப்பாக்கியை சுழற்றி மாஸ் காட்டிய அஜித், நிஜத்திலும் துப்பாக்கிச் சுடுதலில் மாஸ் காட்டுவது, அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. தொழிலாக சினிமாவில் முழு அர்ப்பணிப்பு கொடுக்கும் அஜித், திரைக்கு வெளியில் தனது வாழ்வை ஆக்கப்பூர்வமாக செல்விடுவதில் தெளிவான சிந்தனை கொண்டவர். அந்த வகையில் சினிமா ஹீரோவாக மட்டுமல்லாமல், நிஜ வாழ்வின் முன்மாதியாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அஜித்.

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகிற ஆக.,8ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories