சினிமா

கே.ஜி.எஃப்-2: நிஜ வாழ்வை போலவே படத்திலும் கிரிமினலான பாலிவுட் பிரபலம் - சஸ்பென்சை உடைத்த படக்குழு!

கன்னட படமான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் வில்லனாக நடிப்பது யார் என்பதை அறிவித்தது தயாரிப்புக் குழு.

கே.ஜி.எஃப்-2: நிஜ வாழ்வை போலவே படத்திலும் கிரிமினலான பாலிவுட் பிரபலம் - சஸ்பென்சை உடைத்த படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட திரையுலக நட்சத்திரமான யாஷ் நடிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் KGF. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படம் கன்னட சினிமா உலகின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையைப் பெற்றது. வரவேற்பை அடுத்து சீனா மற்றும் ஜப்பான் மொழிகளிலும் அந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.

உலகமே திரும்பிப் பார்க்கும் விதமான பணக்காரனாகவும், கேங்ஸ்டராகவும் ஆகவேண்டும் என்ற இலக்குடன் வளரும் சிறுவனின் கதையாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் இருந்தது. இதன் இரண்டாவது பாகம், கதைக்குப் பின்னணியில் உள்ள சரித்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

கே.ஜி.எஃப்-2: நிஜ வாழ்வை போலவே படத்திலும் கிரிமினலான பாலிவுட் பிரபலம் - சஸ்பென்சை உடைத்த படக்குழு!

முதல் பாகம் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதால், இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கே.ஜி.எஃப் படத்தின் பிரதான வில்லன் ’அதீரா’ யார் என்பதை முதல் பாகத்தில் சஸ்பென்சாக வைத்திருந்தனர். எனவே இரண்டாம் பாகத்தில் அதீரா கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட் உலகின் சர்ச்சைக்குரிய உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சஞ்சய் தத், கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் வரவிருக்கும் அதீரா கேரக்டரில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு குழு ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதற்கு சஞ்சய் தத் நன்றி தெரிவித்தும், அதீரா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் தத்தின் பிறந்த நாள் என்பதால், இன்று அவரது கதாபாத்திரத்தை அறிவித்துள்ளது படக்குழு. இதனையடுத்து ட்விட்டரில் #KGFChapter2 மற்றும் #Adheera என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்திற்காக 6 ஆண்டு சிறை தண்டனை பெற்று, தண்டனைக் காலம் முடிய 8 மாதங்கள் இருந்த நிலையில், அவரை மகாராஷ்டிரா அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories