சினிமா

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தமிழக அரசுக்கும், விஷாலுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து விஷாலும், தமிழக அரசும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தமிழக அரசுக்கும், விஷாலுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக தனி அதிகாரியை நியமித்தது தமிழக வணிகவரித்துறை

தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனி அதிகாரி நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தமிழக அரசுக்கும், விஷாலுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!

இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்துவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆகையால், இந்த இரண்டு வழக்கையும் ஒன்றிணைத்து, விசாரணைக்கு பட்டியிலிட உத்தரவிட்ட நீதிபதி ஆதிகேசவலு, சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறை செயலாளர், தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், தனி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories