நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துவரும் 'ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘அர்ஜூன் ரெட்டி’யின் ரீமேக் ‘வர்மா’. பாலா எடுத்த படம் தயாரிப்பாளருக்குப் பிடிக்காத காரணத்தால் கைவிடப்பட்டது. வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் புதிதாக இப்படத்தை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இணை இயக்குனரே இயக்க மீண்டும் உருவானது தமிழ் ரீமேக். துருவ் விக்ரமை தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் அனைவரும் மாற்றப்பட்டனர்.
இரண்டாவது முறையாகப் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு ‘ஆதித்யா வர்மா’ என டைட்டில் வைக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஆதித்யா வர்மா’ படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாக நேற்று படக்குழு அறிவித்துள்ளது.
டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஆதித்யா வர்மா’ வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.