இன்றைய சூழலில் உலகம் முழுவது இணையதள பயன்பாட்டாளர்கள் அதிகரித்துவிட்டன. இந்தியாவிலும் இணையதள பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக இந்தியாவில் அமேசான் பிரைம் (amazon prime video), நெட் ஃப்ளிக்ஸ் (netflix) போன்ற இணையதள பொழுதுபோக்கு சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட இணையதள பொழுதுபோக்கு சேவைகளுக்கு வழிமுறைகளை வகுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்த சேவைகளில் வெளியாகும் வீடியோக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்பதால் ஆபாசமாகவும், சட்டத்திற்கு புறம்பான அம்சங்களுடன் வெளியாகிறது என்றும் எனவே இது போன்ற சேவைகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமேசான் பிரைம் வீடியோ , நெட் ஃப்ளிக்ஸ் போன்ற இணையதள பொழுதுபோக்கு சேவைகளின் செயல்பாடுகளுக்கு விதிகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.