காமிக்ஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வந்த மார்வெல் சீரிஸின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஏப்,26ம் தேதி ரிலீசாகி பட்டைய கிளப்பி வருகிறது.
ஏராளமான சூப்பர் ஹீரோக்களை கொண்டு எடுக்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் திரையிடப்பட்ட நாள் முதலே பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்து வருகிறது.
இதுவரை சீனாவில் சுமார் 700 கோடிக்கும் மேல் வசூல் மழையை பொழிந்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். கிட்டத்தட்ட உலக முழுவதும் 1400 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
2 பில்லியனை டாலரை கடந்து சக்கப்போடு போட்டு வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், உலக அளவில் அதிக வசூலை குவித்த டைட்டானிக் பட வசூலை முறியடித்து தற்போது அவதார் படத்தின் வசூலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு டைட்டானிக், அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பலை பனிப்பாறை மூழ்கடித்தது போன்று, டைட்டானிக் பட வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மூழ்கடித்துவிட்டது என்றும், படத்தில் பணியாற்றிய லைட்ஸ்டார்ம் எண்டெர்டெயின்மெண்ட் உறுப்பினர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.