'ஆடுகளம்',‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி துவங்கியது.
இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அசுரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.