சினிமா

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது ! 

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் சங்க தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2015-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பொதுவாக, நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது.

ஆனால், நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகளை முடித்துவிட்டுத்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பாக்கப்பட்டது. அதன்படி, 6 மாத காலம் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிவடைந்த காரணத்தினால், ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடத்த ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் தேதியை முடிவு செய்வதற்கான, நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், எங்கு தேர்தல் நடத்தலாம் உள்ளிட்ட அனைத்தையுமே முடிவுசெய்து அறிவிக்கவுள்ளனர்.

இந்தத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த அணிக்குப் போட்டியாக, ராதாரவி தலைமையிலான அணி களமிறங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories