சினிமா

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாக்கு பாராட்டு விழா 

தன்னுடைய இனிய குரலால் பெரும் புகழ்பெற்றவர் பி.சுசீலா.அவர்களுக்கு வருகிற,மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாக்கு  பாராட்டு விழா 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தன்னுடைய இனிய குரலால் பெரும் புகழ்பெற்றவர் பி.சுசீலா. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல,ஆயிரம் நிலவே வா,பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார்.

மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories