அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.
அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் குடியரசுக் கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு பதிலாக துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே பிரச்சாரம் சூடுபிடித்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Avengers பட நடிகர்கள் ராபர்ட் டௌனி (Iron Man), க்றிஸ் எவன்ஸ் (Captain America), ஸ்கார்லெட் ஜோஹான்சன் (Natasha), மார்க் ரஃபல்லோ (Hulk), பால் பெட்டனி (Vision) உள்ளிட்டோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தும், பொதுமக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.