உலகம்

டிரம்ப்பை எதிர்க்க பைடனுக்கு போட்டியாக களத்தில் ஹிலாரி கிளிண்டன்- சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் !

டிரம்ப்பை எதிர்க்க பைடனுக்கு போட்டியாக களத்தில் ஹிலாரி கிளிண்டன்- சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக உள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டிரம்ப்பை எதிர்க்க பைடனுக்கு போட்டியாக களத்தில் ஹிலாரி கிளிண்டன்- சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் !

ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது .

இந்த நிலையில், அந்த போட்டியில் முன்னர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்த ஹிலாரி கிளிண்டனும் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட போது கூட டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்றும் எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் பின்னடைவு கண்டு தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டிரம்ப்பை எதிர்க்க ஹிலாரி கிளிண்டனே தகுதி வாய்ந்தவர் என ஜனநாயக கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர். மேலும் அவருக்கு தற்போதும் மக்களின் ஆதரவு அப்படியே இருக்கிறது என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories