உலகம்

கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !

கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் ஏராளமான தெற்காசிய மாணவர்கள் மருத்துவம் தொடர்பான படிப்புகளை படித்து வருகின்றனர். அதில் இந்தியர்களே அதிகமானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்திய அரசின் தகவலின்படி 14 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.

இங்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மாணவர்கள் வசிக்கும் விடுதிகளைக் குறிவைத்து சில கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், "இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு .

கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !

வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் வன்முறையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமடையவில்லை"என்று கூறப்பட்டிருந்தது.

இதனிடையே கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் பரவி வருவதையடுத்து, இந்திய தூதரகம் 0555710041 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் , மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories