உலகம்

Indeed : வேலையை இழந்த வேலைவாய்ப்பு தளத்தின் 8% ஊழியர்கள்... காரணம் என்ன?

Indeed : வேலையை இழந்த வேலைவாய்ப்பு தளத்தின் 8% ஊழியர்கள்... காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கொரோனா காலகட்டத்திற்கு பின்பு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வந்தனர். அதே போல் உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கூட தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதோடு முகநூல் நிறுவனமான மெட்டாவும், தங்களது ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கம் செய்தது.

தொடர்ந்து பைஜூஸ் (BYJU'S), சோமேட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பு நிறுவனமான Indeed நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indeed : வேலையை இழந்த வேலைவாய்ப்பு தளத்தின் 8% ஊழியர்கள்... காரணம் என்ன?

Indeed, Naukri போன்ற இணையதளத்தை பயன்படுத்தி பலரும் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பர். இதுபோன்ற தளங்கள், இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த சூழலில் தற்போது இங்கிருக்கும் ஊழியர்கள் சுமார் 1000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

Indeed : வேலையை இழந்த வேலைவாய்ப்பு தளத்தின் 8% ஊழியர்கள்... காரணம் என்ன?

இந்த நிலையில், வேலைவாய்ப்புகள் குறித்த தகவலை பொதுமக்களுக்கு வழங்கி வந்த Indeed தளம் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 8% பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது இந்நிறுவனம்.

"இது மிகவும் கடினமான முடிவு. ஆனால் நமது நிறுவனத்தின் நன்மைக்காக இந்த முடிவு அவசியமானது. இந்த மாற்றங்கள் நீண்ட காலத்திற்கு Indeed ஒரு வலுவான நிறுவனமாக மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் CEO கிரிஸ் ஹயம்ஸ் (Chris Hyams) கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது பணி நீக்கம் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories