உலகம்

கேபிள் சேவை முறைகேடு : இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை - முடிவடையும் அரசியல் எதிர்காலம் !

கேபிள் சேவையை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேபிள் சேவை முறைகேடு : இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை - முடிவடையும் அரசியல் எதிர்காலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. அதில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

கேபிள் சேவை முறைகேடு : இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை - முடிவடையும் அரசியல் எதிர்காலம் !

அந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனை பின்னர் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், மற்றொரு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயரதிகரிகளுடன் பேச வழங்கப்பட்ட கேபிள் சேவையை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories