உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் : 23 ராணுவ வீரர்கள் பலி - பின்னணியில் தாலிபான்கள் ?

தெஹ்ரிக்-யே-பாகிஸ்தான் அமைப்பின் தாக்குதலில் 23 பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் : 23 ராணுவ வீரர்கள் பலி - பின்னணியில் தாலிபான்கள் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. அதே நேரம் சமீப சில மாதங்களாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் : 23 ராணுவ வீரர்கள் பலி - பின்னணியில் தாலிபான்கள் ?

அதோடு தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தானுக்கெதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருவதாக பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில், தெஹ்ரிக்-யே-பாகிஸ்தான் அமைப்பின் தாக்குதலில் 23 பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் தாராபன் காவல் நிலையம் அமைந்துள்ளது. எல்லையோர பகுதி என்பதால் இந்த காவல்நிலையம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் முகாமாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் அதனை காவல் நிலையத்தின் மீது மோதி தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் சுமார் 23 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-யே-பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories