உலகம்

ஹோட்டலில் BILL கொடுத்ததால் நெஞ்சுவலி : 20+ கடைகளை ஏமாற்றி வந்த நபர் முதியவர் - சிக்கியது எப்படி ?

ஹோட்டலில் விலை உயர்ந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு, காசு கொடுக்காமல் இருக்க நெஞ்சுவலி வந்தது போல் ஏமாற்றி வந்த 50 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹோட்டலில் BILL கொடுத்ததால் நெஞ்சுவலி : 20+ கடைகளை ஏமாற்றி வந்த நபர் முதியவர் - சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஸ்பெயின் பிளாங்கா மாகாணத்தில் 50 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார் . இவர்தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது இந்த நபர் விலையுயர்ந்த உணவுகளை கடையில் சாப்பிட்டு விட்டு, அதற்கு பில் கொடுக்க பணமில்லாத காரணத்தினால் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது போல் நடித்து வந்துள்ளார்.

அதாவது தனக்கு ஏதெனும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் 5 ஸ்டார் ஹோட்டல் போன்ற உயர் ரக ஹோட்டலுக்கு சென்று விடுவார். அங்கே தனக்கு விருப்பமான மிகவும் விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுவ விடுவார். போதும் என்கிற அளவுக்கு சாப்பிட்டு விட்டு, சரியாக கடை ஊழியர்கள் பில்லை எடுத்து வருவர்.

ஹோட்டலில் BILL கொடுத்ததால் நெஞ்சுவலி : 20+ கடைகளை ஏமாற்றி வந்த நபர் முதியவர் - சிக்கியது எப்படி ?

அந்த நேரத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்ற பயத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது போல் நடித்துள்ளார் இந்த நபர். இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அங்கிருப்பவர்கள் கொண்டு செல்வர். அங்கே அவருக்கு சில மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்புவார் இந்த நபர். இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடைக்காரர்களும் இவரிடம் பணம் கேட்க மாட்டர்.

இதனால் இந்த நபர் இதுபோன்று நடித்து வந்துள்ளார். இவ்வாறாக சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஏமாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் இவரது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது சம்பவத்தன்றும் இந்த நபர் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். வழக்கம்போல் தனக்கு வேண்டிய எல்லா உணவையும் சாப்பிட்டுள்ளார்.

ஹோட்டலில் BILL கொடுத்ததால் நெஞ்சுவலி : 20+ கடைகளை ஏமாற்றி வந்த நபர் முதியவர் - சிக்கியது எப்படி ?

பின்னர் ஹோட்டல் ஊழியர் பில்லை எடுத்து வர முற்பட்டார். அப்போது அங்கிருந்து அவர் நகர்ந்துள்ளார். இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய ஊழியர்கள், பணத்தை செலுத்தும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர், பணம் தனது அறையில் இருப்பதால் தான் போய் எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கம்போல் அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறியுள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பதறிப்போய் ஆம்புலன்ஸுக்கு போன் செய்ய கூறியுள்ளனர். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்டாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்வதற்கு பதிலாக, போலீசுக்கு போன் செய்துள்ளார் அங்கிருந்த ஊழியர். இதைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.அப்போது தான் அந்த நபர் இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

டிப் டாப் உடை அணிந்து, சுமார் இந்திய மதிப்பில் ரூ.3000 பணத்துக்கு உணவை சாப்பிட்டு, நெஞ்சுவலி நாடகமாடி வந்த நபர் நீண்ட நாட்களுக்கு பிறகு கையும் களவுமாக போலீசிடம் சிக்கியுள்ள சம்பவம் அங்கு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories