உலகம்

எம்.பி TO துணை பிரதமர்.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்: யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எம்.பி TO துணை பிரதமர்.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்: யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த ஹலிமா யாக்கோப் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார். அதனையடுத்து அடுத்த அதிபர் யார் என்ற போட்டி சிங்கப்பூரில் தீவிரமடைந்தது.

இந்த அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வாரம் முடிந்தது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் போட்டியிட்டனர்.

மூன்று பேரும் முக்கிய நபர்கள் என்பதால் அதிபர் தேர்தல் களம் மும்முனைப் போட்டிக்கான களமாக அமைந்தது. இந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் இந்த அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது.

எம்.பி TO துணை பிரதமர்.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்: யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

இதுவரை இல்லாத வகையில், அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இதனால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து 70.4% வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். சிங்கப்பூரில் குடிபெயர்ந்த தர்மன் சண்முகரத்னம் குடும்பத்தினர் அங்கேயே இருந்து பெரும் செல்வாக்கை பெற்றுள்ளனர். இதனைடுத்து கடந்த 2001ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து அதேதொகுதியில் 4 முறை போட்டியிட்டு 20 வருடங்களுக்கு மேலாக எம்.பி.யாக தொடர்ந்துள்ளார்.

எம்.பி TO துணை பிரதமர்.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்: யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

22 ஆண்டுகாலம் அரசியலில் பணித்த தர்மன் சண்முகரத்னம் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். மேலும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரியத்தின் தலைவராகவும் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், தர்மன் சண்முகரத்னம் தான் வகித்த அமைச்சரவையில் பதவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் களம் இறங்கினார். இவரின் இந்த முடிவு கட்சிக்கு பேரிழப்பு என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வருத்தம் தெரிவித்திருந்தார். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories