கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாகவும் அவர்மேல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ட்ரம்ப் கைது செய்யப்பட்டு அட்லாண்டாவிலுள்ள ஃபுல்டன் கிண்டி சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவருக்கு PO1135809 என்ற எண் வழங்கப்பட்டது. எனினும் டிரம்ப் சார்பில் 2,00,000 அமெரிக்க டாலரை பிணையாக செலுத்தப்பட்டதால் வெறும் 20 நிமிடங்களில் டிரம்ப் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் அமெரிக்க முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தன் மீது தொடுத்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்றும் கூறியுள்ளார்.