உலகம்

நாய் பிரியர்களுக்கு Shock : பிட்புட் To டாபர்மன் - 16 வகை நாய்களை வளர்க்க தடை.. எங்கு, எதனால் தெரியுமா ?

16 வகை நாய்கள் வளர்க்க எகிப்திய அரசு தடை விதித்துள்ளதால் நாய் பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நாய் பிரியர்களுக்கு Shock : பிட்புட் To டாபர்மன் - 16 வகை நாய்களை வளர்க்க தடை.. எங்கு, எதனால் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுக்க விலங்குகள் பிரியர்கள் உள்ளனர். அதிலும் நாய் வளர்ப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என கூறப்படுகிறது. பலவகையான இனத்தை சேர்ந்த நாய்கள் உள்ளது. இதில் சிலவகை வேட்டை மனப்பான்மை கொண்டு காணப்படும். எனினும் நாய் பிரியர்கள் அதனை ஆசை ஆசையாக வளர்த்து வருவர். மேலும் அவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் எகிப்தில் 16 வகை நாய்கள் வளர்க்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கொந்தளிப்புடன் இருக்கின்றனர். அதாவது pitbull, rottweiler, German Shepherd, boxer, husky, Caucasian Shepherd, bullmastiff, Doberman, Alaskan Malamute, Akita, American Bully, Alabai, Dogo Argentino, Cane Corso, and Tosa ஆகிய இன நாய்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாய் பிரியர்களுக்கு Shock : பிட்புட் To டாபர்மன் - 16 வகை நாய்களை வளர்க்க தடை.. எங்கு, எதனால் தெரியுமா ?

ஏனெனில் இந்த வகை நாய்கள் வளர்ப்பதற்கு உகந்தது அல்ல என்றும், இது மிகவும் ஆபத்தான நாய்கள் என்றும், எனவே இதனை வளர்ப்பவர்கள் ஒரு மாதத்திற்குள்ளாக கால்நடை மருத்துவமனைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் cocker spaniel, labrador, poodle, Malinois, Pomeranian, Jack Russell, Great Dane, white shepherd, Maltese dog, and Samoyed - ஆகிய வகை நாய்களை வளர்க்க தடையில்லை என்றும் கூறியுள்ளது.

நாய் பிரியர்களுக்கு Shock : பிட்புட் To டாபர்மன் - 16 வகை நாய்களை வளர்க்க தடை.. எங்கு, எதனால் தெரியுமா ?

இதற்கு நாய்களை வளர்க்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் எகிப்திய விலங்குகளுக்கான கருணைக் கழகத்தின் தலைவரான மோனா கலீல், "இது ஒரு கார் விபத்து காரணமாக மக்கள் கார் ஓட்டுவதைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்றுவது போன்றது" என்று விமர்சித்தும் உள்ளார். எகிப்தின் இந்த சட்டத்துக்கு பலர் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பக்கத்து வீட்டாருடன் சண்டை பிடித்த ஒருவரை, அந்த வீட்டில் வளர்க்க பட்ட ராட்வீலர் நாய் கடித்து குதறியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. இதையடுத்தே அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories