உலகம்

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்

கூகுள் பே நிறுவனம், தங்கள் பயனர்களுக்கு தவறுதலாக பல ஆயிரம் ரூபாய் வரை திடீரென ரிவார்ட் கொடுத்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணைய வழி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் முக்கியமானவை பரிவர்த்தனை. முன்காலத்தில் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், அதற்காக வங்கிக்கு சென்று செல்லான் எழுதி அதில் அவரது வங்கி கணக்கு எண்ணை எழுதி அதன்பிறகே பணம் அனுப்ப முடியும்.

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்

ஆனால் தற்போது யுபிஐ மூலம் நாம் இங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். மக்கள் பயன்பாட்டுக்கு கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் உள்ளிட்டவை பயன்படுத்தி மக்கள் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இதுபோல் ரீ-சார்ஜ், இபி, சிலிண்டர், ஷாப்பிங் என பலவற்றை நம்மால் செய்துகொள்ள முடியும்.

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்

இவ்வாறு செய்யும்போது நமக்கு இவை அனைத்துமே ஸ்கிராச் கார்டு என்ற ஒன்றை தரும். அதன்மூலம், பணம், சலுகை என அநேக ஆபர்கள் வரும். இது பெரும்பாலும் கூகுள் பே-ல் காணப்படும். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் பெரும்பாலும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நாட்டில் உள்ள பயனர்களுக்கு கூகுள் பே வாடிக்கையாளர்களுக்கு போனஸ் தொகை கொடுத்து வருகிறது. அந்த தொகையும் 10, 100 கணக்கில் இல்ல, 1000 கணக்கில்.. அதுவும் 88 ஆயிரம் வரை கூகுள் தங்கள் பயனர்களுக்கு வழங்கி வந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள பயனர் ஒருவர், கூகுள் பே-ஐ பயன்படுத்தும்போது அவர்களுக்கு வரும் ஸ்க்ராட்ச் கார்டில் 1072 டாலர் (இந்திய மதிப்பில் 88000 ரூபாய்) வரை Reward கிடைத்து வருகிறது.

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்

இந்த Reward தொகையின் கீழ் “dogfooding the Google Pay remittance experience.” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பலரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். அதோடு இதுகுறித்து அனைவரும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கூகுள் பே நிறுவனம், தங்கள் கொடுத்து வந்த தொகையை திரும்ப பெற்று வருகிறது.

அள்ளிக்கோ.. அள்ளிக்கோ.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த Google Pay நிறுவனம்: Scratch Card-ல் ரூ.88,000 கிரெடிட்

அதாவது கூகுள் பே நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக பணத்தை அனுப்பி வைத்து விட்டதாகவும், அதனால் நாங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளப்போவதாகவும் அந்நிறுவனம், பயனர்களின் இ-மெயிலுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தங்கள் பணத்தை திரும்ப பெற்று வருகிறது. இந்த செய்தி வெளியானதையடுத்து அமெரிக்காவுக்குனா டாலர்.. இந்தியர்களுக்கு Better Luck Next Time ஆ.. என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories