உலகம்

ஒற்றைத் தலைவலி காரணமாக 30 வயதில் உயிரிழந்த TikTok பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவைச் சேர்ந்த TikTok பிரபலம் ஜெஹேன் தாமஸ் ஒற்றைத் தலைவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றைத் தலைவலி காரணமாக 30 வயதில் உயிரிழந்த TikTok பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெஹேன் தாமஸ். 30 வயதாகும் இவர் டிக் டாக் சமூகவலைதளத்தில் பிரபலமானவர். இதில் தினந்தோறும் வீடியோவை வெளியிட்டு வந்துள்ளார். இதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. இவரது டிக் டாக் பக்கத்தைக் கிட்டத்தட்ட 72,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில் ஜெஹேன் தாமஸ் தனது 30 வயதில் ஒற்றைத் தலைவலி காரணமாக உயிரிழந்து விட்டதாக அவரது நண்பர் Alyx Reast கடந்த வெள்ளிக்கிழமை GoFundMe பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒற்றைத் தலைவலி காரணமாக 30 வயதில் உயிரிழந்த TikTok பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

இவரின் இந்த பதிவைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெஹேன் தாமஸ் மார்ச் 5ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதி இருந்த உருக்கமான பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், 2 ஆண்டுகளாக எனக்கு ஒன்றைத் தலைவலி பிரச்சனை இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நான் ஆப்டிக் நியூரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டேன். பிறகு multipele sclerosis இருப்பதாக நான் நினைத்தேன். தற்போது தலைவலி என்னை முற்றிலும் முடக்கிவிட்டது. எனது அப்பா அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எனது மகன்களைக் கவனித்துக் கொள்வதில் உறுதுணையாக இருந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சிகிச்சை பற்றியும் ஜெஹேன் தாமஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதில் ஒன்றைத் தலைவலி காரணமாக டிக்டாக் பிரபலம் ஜெஹேன் தாமஸ் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories