பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த எஅண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதிவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய காட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
இதனிடையே கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் தற்போது சந்தித்து வருகிறது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் "பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு, நாட்டில் மீண்டும் அமைதியின்மை ஏற்படக் காரணமாக இருந்த முந்தைய இம்ரான் கான் அரசு தான் நாட்டின் இந்த நிலைக்கு காரணம். இதனை சரிசெய்ய வாய்ப்புகள் இருந்த போதும், அவர்கள் கோட்டைவிட்டனர். இப்போது நாங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணி அரசுக்கு அழைத்துவந்த ஆதரவரை திரும்பப்பெறுவோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தடாலடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அந்த கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, " சிந்து மாகாண மக்கள் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர உரிய நிவாரணம் தேவை. கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது கடினம்" எனக் கூறியுள்ளார். 58 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்கான ஆதரவை விலகிக்கொண்டாள் ஆட்சி நிச்சயம் கவிழும் என்ற நிலையில், அக்கட்சியின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.