கொரோனா காலகட்டத்திற்கு பின்பு உலகளவில் பெரும் பொருளாதார பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் ஆள்குறைப்பு வேலைகளை செய்து வந்தன. உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கூட தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
அதன்பின்னர் வந்த உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகி ஐரோப்பா, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு வேலையில் இறங்கியது. இதன் தாக்கம் உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கூட இந்தியாவின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான(Edutech) BYJU'S நிறுவனம் தங்கள் பெருக்குவதற்காக சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு இந்தியாவில் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உலக அளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பணிநீக்கம் செய்யவிருக்கும் ஊழியர்களின் சரியான எண்ணிக்கையைப் பகிர்ந்து கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்தாலும், கிட்டத்தட்ட 1000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் பல்வேறு ஆதரவு மற்றும் சலுகைகளுடன் தொடங்கப்படும் உலகின் முன்னணி நிறுவனங்களே இப்படி ஆட்குறைப்பை செய்து வரும் நிலையில், இதனால் அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.