உலகம்

எலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுனு நிரூபிச்சிட்டலே.. 11 பேனாக்களின் மேல் பிட் எழுதி சென்ற கில்லாடி மாணவன்!

ஸ்பெயினை சேர்ந்த சட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பேனாவின் மேல் பிட் எழுதிக் காப்பியடித்தாக பேராசிரியர் ஒருவர் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுனு நிரூபிச்சிட்டலே.. 11 பேனாக்களின் மேல் பிட் எழுதி சென்ற கில்லாடி மாணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நம்மில் பலருக்கும் தேர்வில் காப்பியடித்த அனுபவம் இருக்கும். மேசையில் சிறிய எழுத்துக்களில் எழுதி வைப்பது முதல் மினி ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் காப்பியடித்து இருப்போம். இப்படிக் காப்பியடிக்கும் போது மாட்டியும் இருப்போம்.

தேர்வும், காப்பியடிப்பதும் எப்போதும் பிரிக்க முடியாதவையாகவே இருந்து வருகிறது. நம் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களிடம் சிக்காமல் தேர்வில் காப்பியடிப்பவரை நாம் விழந்து பார்த்திருப்போம். ஆனால் இதைவிட விஞ்சு அளவிற்கு ஒரு சம்பவம் ஸ்பெய்ன் நாட்டில் நடந்துள்ளது.

ஸ்பெய்ன் நாட்டில் மலகா சட்ட பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வின் போது முழு பாடத்தையும் 11 பேனாக்களின் மேல் சுருக்கமாகப் பொறித்துக் காப்பியடித்துள்ளார்.

முதலில் பேராசிரியருக்கு இவர் மீது சந்தேகம் வரவில்லை. அதிகமான பேனாக்களை மேசை மீது வைத்திருந்ததால் பேராசிரியர் அதை உற்று நோக்கியபோதுதான் அதன் மேல் எழுத்துக்கள் இருந்தை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி மாணவரை கைது செய்துள்ளனர்.

எலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுனு நிரூபிச்சிட்டலே.. 11 பேனாக்களின் மேல் பிட் எழுதி சென்ற கில்லாடி மாணவன்!

இந்நிலையில் லூசி என்ற பேராசிரியர் இந்த சம்பவத்தைப் புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இது மாணவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் பதிவைப் பார்த்த பலரும் மாணவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories