உலகம்

'Work form Home' போய் 'Work from Pub'- இங்கிலாந்தில் ட்ரெண்டாகும் புதிய வேலை: என்னென்ன வசதிகள் தெரியுமா?

இங்கிலாந்தில் ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும்வகையில் 'Work from Pub' என்ற புதிய முறை, ட்ரெண்டாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

'Work form Home' போய் 'Work from Pub'- இங்கிலாந்தில் ட்ரெண்டாகும் புதிய வேலை: என்னென்ன வசதிகள் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2019 ஆண்டில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து நாடுகளில் 2020-ம் ஆண்டு லாக்டவுன் போடப்பட்டது. அப்போது வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என்று 'Work form Home' என்பது ட்ரெண்ட் ஆனது. இது குறிப்பாக ஐடி கம்பனியில் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இது போன்று வீட்டிலிருந்தே வேலை பார்க்க பலரும் விருப்பம் காட்டி வருவதால் இப்போதும் பல நாடுகளில் மக்கள், தங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். இது போன்று Work form Home இருப்பதால் தங்கள் நேரம் மிச்சமாவதாக பணியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'Work form Home' போய் 'Work from Pub'- இங்கிலாந்தில் ட்ரெண்டாகும் புதிய வேலை: என்னென்ன வசதிகள் தெரியுமா?

இந்த நிலையில் Work form Home-ல் இருக்கும் பணியாளர்களை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து நாட்டில் 'Work from Pub' என்ற புதிய முறை ட்ரெண்டாகி வருகிறது. இந்த முறை தற்போது இங்கிலாந்தில் உள்ள சில ஹோட்டல்கள், பார்களில் நடைபெறுகிறது. இதில் பணியாளர்கள் தங்கள் மடிக்கணினி வைத்துக்கொண்டு வேலைசெய்து வருகின்றனர்.

மேலும் இது போன்று 'Work from Pub'-ஐ மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அங்கிருக்கும் மற்ற சில பிரபல பார்கள், பப்புக்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். அதன்படி Fuller's Brewery என்ற நிறுவனம்

'Work form Home' போய் 'Work from Pub'- இங்கிலாந்தில் ட்ரெண்டாகும் புதிய வேலை: என்னென்ன வசதிகள் தெரியுமா?

இதனைக் கவனித்த, Young's pubs, Fuller's Brewery, B&K - Microbrewery and British Pub போன்ற Pub-கள், `வொர்க் ஃப்ரம் பப்' என்பதை அதிக அளவில் விளம்பரப்படுத்தியும், விரிவுபடுத்தியும் வருகின்றன. இதில் Fuller's Brewery, தங்களது 380 Pub-களில் நாள் ஒன்றுக்கு வெறும் 10 பவுண்டுக்கு, (இந்திய மதிப்பில் ரூ.900) மதிய உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்குகிறது.

மேலும் B&K - Microbrewery and British Pub, அதே 10 பவுண்டுக்கு `workspace'-ஐ வழங்குகிறது. இந்த workspace-ல் WiFi, power sockets, ப்ரின்டிங் மற்றும் அன்லிமிடெட் சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இது தற்போது அந்த நாட்டில் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories