ஓலா,உபர் போன்ற நிறுவனங்கள் உலகன் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் வாடகை சேவையை அளித்து வருகின்றன. ஆனால், அதன்மீது அதிக கட்டணம் விதிப்பதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில பிரச்சனைகளும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு 15 நிமிட பயணத்துக்கு 32.39 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஆலிவர் கப்லன் என்பவர் வேலை முடிந்து உபேர் நிறுவனத்தின் வாடகை டாக்சி மூலம் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வேலை முடிந்து உபேர் நிறுவனத்தின் வாடகை டாக்சி மூலம் 15 நிமிட பயண தூரத்தில் உள்ள விட்ச்வுட்டில் உள்ள ஒரு பப்பிக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு இந்த பயண தூரத்துக்காக அந்நாட்டு மதிப்பில் 35,477 (தோராயமாக ரூ. 32.39 லட்சம்) பில் வந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுதொடர்பாக உபேர் நிறுவனத்தை அணுகி இது தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவ்வாறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அவர் புக் செய்த இடத்தை போலவே ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு இடத்தின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவ்வளவு ரூபாய் வந்ததாக உபேர் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.