அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு உள்ள உணவகம் ஒன்றின் கார் பார்க்கிங்கில் நான்கு இந்தியப் பெண்கள் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அமெரிக்கப் பெண் ஒருவர் ’நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பி போங்க. உங்களைப் பார்த்தாலே வேறுப்பா இருக்கிறது்' என இனவெறியுடன் பேசியுள்ளார்.
மேலும், 'இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் நீங்கள் ஏன் இங்கே வருகீறிர்கள்' என்று பேசி ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் இந்தியப் பெண்கள் மீது இனரீதியாகப் பேசியது டெக்ஸாஸ் நகரின் ப்ளேனோ பகுதியைச் சேர்ந்த எஸ்மெரால்டா அப்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பினத்தவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.