உலகளவில் மிகவும் பிரபலமானவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும் ஒருவர். இவர் தனது நிர்வாக திறமையில் மட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதிலும் கைதேர்ந்தவர் ஆவார். இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் தனக்கு தோன்றியதை கருத்தாக பதிவிட்டு வருவது வழக்கம். மேலும் இவரது பதிவுகளில் எதார்த்தங்களும் அடங்கும்.
அந்த வகையில், தற்போது மக்கள் தொகை பற்றி பதிவு ஒன்றை செய்துள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகளவில் பல நாடுகளும் மக்கள் தொகை பிரச்னைகளை சந்தித்து வந்தது. அந்த வகையில் அப்போது மக்கள் தொகை பெருக்கத்தில் சீனா முதலிடத்தில் இருந்தது. இதனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி, பல நாடுகள் அன்றைய சூழ்நிலையில், குழந்தைபெறுதலை குறைக்க மக்களுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி சீனாவில் 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்றும், இந்தியாவில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்றும் விதிகளை அந்தந்த நாடுகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விதித்தன. இதனால் மக்கள்தொகை அந்தந்த நாடுகளில் சீராக காணப்படுவதாக கருதினர்.
இதுபோன்ற விதிகளினால், பல்வேறு நாடுகளில் மக்கள் தொகை குறைய தொடங்கியது. மக்கள் தொகை கட்டுப்பாதின் காரணாமாக ஒரு நாட்டின் மனித வளபலம் பாதிக்கப்பட்டது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்ற விதியை ரத்து செய்யப்பட்டு 'ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள்' என்ற விதியை கொண்டு வந்தது.
இதன்மூலம் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று எண்ணினர். ஆனால் மாறாக பிறப்பு விகிதம் அதிகமாகாமல் குறைந்தே காணப்பட்டு வருகிறது. இதனால் தற்போது சீன மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி எந்த தம்பதியினர் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கனடா அரசும் தம்பதி 10 குழந்தைகள் பெற்று கொண்டால் 13 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக ரஷ்ய அரசும் அறிவித்திருந்தது. இப்படி ஒவ்வொரு நாடும் மக்கள் தொகை பெருக்க பல்வேறு வழிமுறைகளை தேடி வரும் நிலையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக மக்கள் தொகை குறைவது என்பது இந்த மனித குலத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். காலநிலை மாற்றத்தை விட மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் பெரிய ரிஸ்க்தான். ஆனால் நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பேசுபொருளாகி வருகிறது.