நவீன உலகில், தற்போது யாராலும் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக மொபைல் போனில் உள்ள வாட்சப். ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது வாட்சப் பெயர்களில் நிறைய ஆப்-கள் வந்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் அண்மையில், 'Hey WhatsApp' என்ற செயலி மக்களிடம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாட்சப் நிறுவனத்தின் CEO வில் காத்கார்ட், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது வாட்சப் பெயரில் வரும் வேறு எந்த வாட்சப்பையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்க பதிவில், "பயனர்களே.! உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் வாட்சப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதன் அதிகாரபூர்வ http://WhatsApp.com/dl இணையதளத்தில் நேரடியாக சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்து வேண்டும் என்று கூறுங்கள்.
மொபைல் போன் மால்வேர் என்பது ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாகும், அதை எதிர்க்க வேண்டும், மேலும் அது பரவாமல் தடுக்க பாதுகாப்பு சமூகம் தொடர்ந்து புதிய வழிகளை உருவாக்கி வருகிறது.
வாட்சப் பெயரில் வரும் அனைத்து செயலியும் பயன்படுத்த நேரிட்டால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். நாங்கள் வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வழங்குவதாகக் கூறும் சில போலியான செயலிகளை பாதுகாப்பு ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தோம். அதன்படி "HeyMods" என்ற டெவலப்பரின் "Hey WhatsApp" போன்ற செயலிகள் ஆபத்தானவை.
இது போன்ற செயலிகள் உங்களது தகவல்களை திருடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மோசடி செயலியாகும். எனவே பயனர்கள் இது போன்ற போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளார்.