உலகம்

Wi-Fi, Car parking வசதி இல்லாமல் அவதிப்படும் டெஸ்லா ஊழியர்கள்.. எலன் மஸ்க் அதிரடி முடிவால் வந்த வினை!

டெஸ்லா நிறுவனத்தில் சரியான Wi-Fi வசதி இல்லாததால் அதன் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Wi-Fi, Car parking வசதி இல்லாமல் அவதிப்படும் டெஸ்லா ஊழியர்கள்.. எலன் மஸ்க் அதிரடி முடிவால் வந்த வினை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பரவிய கொரோனாவால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதித்தனர். தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற தங்களின் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்களையும், 40 மணி நேரமாவது அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என அதன் நிறுவனர் அனைவருக்கும் எலான் மஸ்க் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

Wi-Fi, Car parking வசதி இல்லாமல் அவதிப்படும் டெஸ்லா ஊழியர்கள்.. எலன் மஸ்க் அதிரடி முடிவால் வந்த வினை!

மேலும், 40 மணி நேரம் அலுவலகத்தில் இருந்து வேலை பார்க்கவில்லை என்றால் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து டெஸ்லா நிறுவனத்தில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலைபார்க்கத் துவங்கியுள்ளார். ஆனால் அவர்களால் பழையபடி அலுவலகத்தில் இருந்து பணியாற்ற முடியவில்லை.

Wi-Fi, Car parking வசதி இல்லாமல் அவதிப்படும் டெஸ்லா ஊழியர்கள்.. எலன் மஸ்க் அதிரடி முடிவால் வந்த வினை!

இதற்குக் காரணம், அலுவலகத்தில் முறையான Wi-Fi வசதி இல்லாததால் அவர்களால் சரியாக பணியாற்ற முடியவில்லை. மேலும் அலுவலகத்தின் மேசைகளும் மிகவும் மோசமாக உள்ளதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல் அலுவலகத்தில் கார் பார்க்கிங் வசதியும் அனைத்து ஊழியர்களுக்கும் இல்லாததால் பலர் சாலைகளிலேயே கார்களை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதை அடுத்து மீண்டும் நாங்கள் வீட்டில் இருந்தே வேலைபார்ப்பதாக ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Wi-Fi, Car parking வசதி இல்லாமல் அவதிப்படும் டெஸ்லா ஊழியர்கள்.. எலன் மஸ்க் அதிரடி முடிவால் வந்த வினை!

மேலும் இந்த நெருக்கடிக்குக் காரணம் டெஸ்லா நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021 வரை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதுவரை 99,210 பேர் பணியாற்றுகின்றனர். இதனால் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவே இப்படி அலட்சியமாக எலான் மஸ்க் இருக்கிறாரோ என அதன் ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories