உலகம்

இத்தாலி பிரதமருக்கு கொரோனா.. மீண்டும் உலகை அச்சுறுத்தும் வைரஸ்! #5in1_World

ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமருக்கு கொரோனா.. மீண்டும் உலகை அச்சுறுத்தும் வைரஸ்! #5in1_World
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) ரொனால்டோவுக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு!

ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதாக ரொனால்டோ ஜோடி தெரிவித்திருந்தது. இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் அதில் மகன் இறந்துவிட்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். பெண் குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமருக்கு கொரோனா.. மீண்டும் உலகை அச்சுறுத்தும் வைரஸ்! #5in1_World
OSCAR DEL POZO

2) இத்தாலி பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இத்தாலி பிரதமர் மரியோ டிராகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 74 வயதான மரியோவுக்கு அறிகுறிகள் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, வருகிற 20,21 தேதிகளில் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல இருந்த இத்தாலி பிரதமரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

3) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாய்!

அமெரிக்காவில் நாய் ஒன்று அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துவரும் நாயாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிஹுவாஹுவா வகையை சேர்ந்த நாய் ஒன்று 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த நாய் "உலகின் மிகப் பழமையான நாய்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாய் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்குச் சொந்தமானது. சிஹுவாஹுவா சராசரி ஆயுட்காலம் 12 முதல் 18 ஆண்டுகள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி பிரதமருக்கு கொரோனா.. மீண்டும் உலகை அச்சுறுத்தும் வைரஸ்! #5in1_World

4 ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு!

அப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதனையடுத்து அப்பகுதியில் தலிபான் படைகள் சுற்றிவளைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஷியா ஹசாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அந்நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

5) ரஷ்ய அதிபருடனான உரையாடல் நிறுத்தப்பட்டது!

உக்ரைனில் நடந்த "பாரிய படுகொலைகள்" காரணமாக புதினுடனான உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். "புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷியாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பிறகு நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை". தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறினார். போர் தொடங்கிய காலத்தில் இருந்து உக்ரைன் அதிபரிடம் 40 முறை பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories