உக்ரைன் மீது ரஷ்யா 17வது நாளாகத் தனது தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இதனால் சொந்த மண்ணை விட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அதேபோல் உக்ரைனிலிருந்த வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு விமானங்கள் மூலம் சென்றடைந்துள்ளனர்.
மேலும் வெளிநாட்டிலிருந்த உக்ரைன் மக்களும் தங்கள் நாட்டிற்காகப் போரில் பங்கேற்க உக்ரைன் வந்துள்ளனர். இப்படி இந்தப்போர் காரணமாக அதிகமான இடபெயர்வுகள் நடந்துள்ளதால் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாலும், உக்ரைன் மற்றும் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளது. இதனால் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை நிறுத்தம் ஆகியவற்றின் காரணமாகக் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளது” என தெரிவித்துள்ளது.