உலகம்

“ரஷ்யா - உக்ரைன் போர்.. கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு?” : கதிகலங்கும் உலக நாடுகள் !

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

“ரஷ்யா - உக்ரைன் போர்.. கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்க அமெரிக்கா முடிவு?” : கதிகலங்கும் உலக நாடுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 14வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ரஷ்யா தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதித்ததால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையை 300 டாலராக உயர்த்துவோம் என ரஷ்யா உலக நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையை 300 டாலராக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் விரைவிலேயே உலகநாடுகள் கடுமையாகப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கருதப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories